6 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கபட்ட 60 வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு கையளிப்பு!

ஜவ்பர்கான்

சுனாமி தாக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கென சவூதி அரேபிய அரசின் நிதி உதவியின் கீழ்; நிர்மாணக்கப்பட்ட 60 வீடுகள் நேற்றுமாலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டன.

DSC04589_Fotor

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்தில் 6 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 60வீடுகளும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கையளிக்கப்பட்டது.

DSC04601_Fotor

 

சவுதி அரேபியா மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலை கழக பீடாதிபதி கலாநிதி அஸ்ஸெய்க் சலாஹ் சாலிம் சயீத் பாஉஸ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தலா 10 இலட்சம் ரூபாய் செலவில் ஒவ்வொருவீடும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.பயனாளிகளுக்கு தளபாடங்களும் வழங்கப்பட்டன.

DSC04584_Fotor DSC04598_Fotor DSC04602_Fotor