அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தும் வல்லமை இருக்கின்றது – மங்கள் சமரவீர !

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் வௌிவிசகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடக அறிக்ைக ஒன்றை வௌியிட்டுள்ளார். 

563288897Mangala

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்தும் வல்லமை இருப்பதாக அந்த அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த யோசனையை செயற்படுத்துவதற்குத் தேவையான வசதி, விஷேட திறமை மற்றும் அர்ப்பணிப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கலப்பு நீதிமன்றமொன்றை அமைக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில் சர்வதேச தலையீடுகள் இன்றி இலங்கைக்குள்ளேயே இது தொடர்பான விசாரணைகளை மேற்காள்ள வேண்டும் எனக் கூறி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் நேற்று யோசனை ஒன்று சமர்பிக்கப்பட்டது. 

பொதுநலவாய அமைப்பு மற்றும் உள்நாட்டு நீதித்துறை சார்ந்தவர்களினால்நம்பகரமான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
இந்தநிலையில் நாடு என்ற வயைில் அவ்வாறானதொரு விசாரணையை மேற்கொள்ளும் திறமை இருப்பதாக வௌிநாட்டமைச்சர் மங்கள சமரவீர வௌியிட்டுள்ள ஊடக அறிக்ைகயில் தெரிவித்துள்ளார். 
அத்துடன் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் 30வது கூட்டத் தொடரில் இலங்கை மாபெரும் வெற்றியை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.