ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஜனாதிபதியினால் பலஸ்தீன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகளுக்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட பௌஸான் அன்வர், அஸ்மி தாஸிம், எஸ்.ஜே. முஹைடீன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றினை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ வெள்ளவத்தை மெரையின் கிறைண்ட் ஹோட்டலில் நேற்று (22) ஏற்பாடு செய்திருந்தது.
வை.எம்.எம்.ஏயின் தேசியத் தலைவர் சித்தீக் எம். சலீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விஷேட பேச்சாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும், பிரித்தானியாவிற்கான முன்னாள் உயர் ஸ்தானிகருமான பாயிஸ் முஸ்தபா கலந்து கொண்டிருந்தார். மேற்படி நிகழ்வில் வை.எம்.எம்.ஏயின் அங்கத்தவர்கள், புத்தி ஜீவிகள் கல்விமான்கள், சட்டத் தரணிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பலஸ்தீனத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட பௌஸான் அன்வருக்கு அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் எம் பாறுக்கும், சவுதி அரேபியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட அஸ்மி தாஸிமிற்கு முன்னாள் தலைவர் கே.என்.டீனும், ஐக்கிய அரபு இராட்சியத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட எஸ்.ஜே. முஹைடீனுக்கு முன்னான் தலைவர் ஹலீம் ஏ அஸீசும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.