மாகாண சபை உறுப்பினர் நஸீர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

 

அபு அலா –

இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌ அந்த மாபெரும் தியாகச் சரித்திரம் படைத்த இப்ராஹீம் நபியவர்களின் இறையச்சத்தையும், அவரின் வரலாறு தொடர்பான பல்வேறு சம்பவங்களையும் உணரத்தும் இந்த புனித ஹஜ் தியாகத் திருநாளில் உலக வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க அள்ளாஹ்வை பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

nazeer - mpc

அவர் மேலும் விடுத்துள்ள ஹஜ் பொருநாள் வாழ்த்துச் செய்தியில்,

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி (அலை) அவர்களைப்போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே நம் நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து இன்மையிலும், மறுமையிலும் இறைவனின் அருளைப்பெற்று வாழ நாம் முயற்சிப்போம்.

இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற பலர் இம்முறை ஹரம் சரிபில் ஏற்பட்ட விபத்தொன்றின் மூலம் மரணித்த சம்பவம் உலக முஸ்லிம்களை மட்டுமல்ல எல்லா மதத்தவர்களின் மனதையும் நெகில வைத்துள்ளது. அந்த விபத்தில் மரணித்த எமது உறவுகளையும் இந்நன்னாளில் ஞாபகப்படுத்தி நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறேன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.