அஸ்ரப் எ சமத்
அக்டேபா் 5ஆம் திகதி ஜக்கிய நாடுகளின் உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்படுகின்றது.
அத்திணத்தினை முன்னிட்டு வீடமைப்பு அமைச்சு கொழும்பில் வாழும் 3000 மாணவா்களை கொழும்பு விகாரமாகாதேவி பாாக்கு அழைத்து இலங்கையில் அழகான நகரம் என்ற தலைப்பில் சித்திரக் கண்காட்சி ஒன்றை நடாத்தியது.
இந் நிகழ்வினை முன்னாள் ஜனாதிபதியின் பாரியா கேமா பிரேமதாச மற்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நகர குடியிருப்பு அதிகார சபையின் தலைவா்கள் பங்குபற்றுதலோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் தெரிபு செய்யப்பட்ட மாணவா்களுக்கு உலக குடியிருப்பு தினத்தன்று கொழும்பில் நடைபெறஉள்ள நிகழ்வில் ஜனாதிபதியினால் பரிசில்களும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்படும்.