போக்குவரத்து சேவையில் ஈடுபட தகுதியற்ற 15 வாகனங்கள் சுற்றிவளைப்பில் கண்டுபிடிப்பு!

ஜவ்பர்கான்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட தகுதியற்ற நிலையில் காணப்பட்ட சுமார் 15 வாகனங்கள் நேற்றிரவு மோhட்டார் போக்குரவத்து திணைக்கள அதிகாரிகள் ;பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டன.

 

மட்டக்களப்பு மாவட்ட மோட்டர் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் வி.ஆர்.டி.லக்ஸ்மன் பண்டார தலைமையில் திணைக்கள அதிகாரிகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் வாகன போக்குவரத்து பொறுப்பதிகாரி ஜீ.துசார உட்பட பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து இத்தேடுதலை நடாத்தினர்.

 

காத்தான்குடி பிரதான வீதியில் கனரக வாகனங்கள் நிறுத்த்ப்பட்டு வாகனத்தின் தரம் பரிசோதனை செய்யப்பட்டபோது பழுதடைந்தஇ சேவையில் ஈடுபட தகுதியற்ற வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் 10 தினங்களுக்குள் வாகனனங்கள் திருத்தியமைக்கப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் காண்பிக்க வேண்டுமென அதிகாரிகள் உத்திரவிட்டுள்ளனர்.

 

இத்தகைய வாகனங்களால் இம்மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

S2670005_Fotor_Collage_Fotor