இலங்கையின் தொழிற்பயிற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக ஜேர்மன் உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகருக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுவரும் தொழிற்பயிற்சி கட்டட தொகுதியை பார்வையிட்டார்.
இதன்போது கருத்து வௌியிட்ட ஜேர்மன் வௌிவிவகார அமைச்சர், தமது அரசாங்கம் இலங்கையில் 11 தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்துவருவதாக கூறியுள்ளார்.
தேசிய திறன் விருத்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, வட மாகாண கல்வி அமைச்சர் டி.குருகுலராஜா உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, ஜேர்மன் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்
தாம் மீண்டும் ஜேர்மனுக்கு சென்ற பின்னர் இலங்கை வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொடு்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இதன்போது அவர் உறுதியளித்திருந்தார்