கல்முனை மாநகர சபையின் அசமந்த போக்கினால் மக்கள் அசௌகரியம் !

எஸ்.அஷ்ரப்கான்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரையை அண்மித்த சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் குறித்த ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாரிய நோய்த்தாக்கம், அசேளகரியங்கள் எற்படுவதுடன், துர்நாற்றம் வீசுவதாகவும் கல்முனை மாநகர சபை இது விடயத்தில் அசமந்தப் போக்குடன் நடந்துகொள்வதாகவும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தெரிவித்தார்.

iiioo_Fotor

இது விடயமாக கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலியிடம் தெரிவித்தபோது குப்பைகளை அகற்றி அதனை கொட்டுவதற்கு இடமில்லை என்றும் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

klm_Fotor

இதேவேளை கடற்கரையை அண்டிய இப்பிரதேசத்தால் நாளாந்தம் அதிகமான மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களும் பெரும் சுகாதார சீர்கேட்டினை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். இதுவரை குப்பைகளை அகற்றுவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ள நிலையிலுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்கு  அச்சுறுத்தலாகவும்காணப்படும் இக்குப்பைகளை அகற்ற வேண்டியது கல்முனை மாநகர சபையின் கடமைப்பொறுப்பொன்றாகும். 

lop_Fotor

இது விடயமாக கல்முனை மாநகர பிரதி முதல்வர் முழக்கம் அப்துல் மஜீட் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் நாம் நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில்தான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை போட்டு, மண்ணினால் முடிவந்தோம். ஆனால் இடையில் சில தடங்கல்கள் ஏற்பட்டதனால்  குப்பை அகற்றுவதில் அசௌகரியங்கள் ஏற்பட்டது. அதனால் தற்போது மாநகர சபையின் அதிக இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மீண்டும் அங்கு குப்பை போடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்னும் ஓரிரு தினங்களில் அவை அகற்றப்படுவதற்கான நடவடிக்கை மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.