பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்புக்கு பிரதான காரணம் என்ன ?

எஸ்.அஷ்ரப்கான்

 பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்புக்கு பிரதான காரணம் நமது நாட்டு பெண்களின் ஆடையும், பாலியல் சம்பந்தமான ஊடகங்களுமே என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
சமீப காலங்களில் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணம் என்ன என நெத் எப் எம் சிஙகள மொழி வானொலியால் வினவப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

mubarak
இத்தகையை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பெண்களின் ஆடையே முக்கிய காரணமாக இருக்கிறது. நமது நாட்டு பெண்களின் ஆடைகளை பாருங்கள். அவை ஆடையா அல்லது நிர்வாண கோலமா? அவ்வாறு அரை குறை ஆடையுடன் வீதியால் போகும் போது சாரதிகள் கூட பல விபத்துக்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.
அது மட்டுமல்ல பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வரும் பெண்களின் புகைப்படங்கள், ஆபாச படங்கள் என்பன வாலிபர்களின் உணர்வை தூண்டக்கூடியதாக இருக்கின்றன என்றார். அப்படியாயின் சஊதி போன்ற நாடுகளில் இத்தகைய வல்லுறவு குறைவாக உள்ளதே என ஊடகவியலாளர் கேட்ட போது
சஊதியில் வெறுமனே பாலியல் வல்லுறவுக்கு மரண தண்டனை கொடுப்பதில்லை, மாறாக பாலியலை தூண்டும் அனைத்து வழிவகைகளையும் அங்கு தடை செய்துள்ளார்கள். அங்கு பகிரங்க சினிமா இல்லை. அரை நிர்வாண பெண்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாது. மித மிஞ்சிய ஆண் பெண் கலப்பு இல்லை. இவ்வாறு அனைத்து கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டே இதனையும் மீறி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் பாலியல் உந்துதலுக்குரிய அனைத்து பாதைகளையும் திறந்து விட்டு துஷ்பிரயோகம் அதிகரித்து விட்டதே என ஒப்பாரி வைக்கிறோம்.
ஆகவே பெண்களின் மோசமான ஆடைகளை கட்டுப்படுத்தும் வகையில் முதலில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதே போல் பாலியலை தூண்டும் அனைத்து விடயங்களையும் தடுத்து விட்டு அதன் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டத்தை முன்னெடுப்பது நியாயமானதாகும் என அவர் கூறினார்.