மட்டு.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் !

ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்ட வேiலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கருகில் மணிக்கூட்டுக்கோபுச்சந்தியில் இப்போராட்டம் நடாத்தப்பட்டது.

DSC04456_Fotor
கடந்த 2010ம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாத 1200 பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.
ஆர்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஆண் பெண் வேலையற்ற பட்டதாரிகள் பங்கு கொண்டனர்.

DSC04461_Fotor
புதிய அரசாங்கமே வேலை வழங்குஇஜனாதிபதியே தொழிலின்றி வாடும் எமக்கு தொழில் தாருங்கள் உட்பட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

DSC04467_Fotor