மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சேவை வட பகுதி முஸ்லீம்களிற்கு தேவை-மௌலவி மஹ்மூத் பலாஹி

பாரூக் சிஹான்
மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக தற்போது கடமையேற்றுள்ள எம்.ஹிஸ்புல்லாஹ் வட பகுதி முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையில் அக்கறை காட்ட முன்வர வேண்டும் என யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் மஹ்மூத் பலாஹி குறிப்பிட்டுள்ளார்.
Screenshot_2015-09-18-14-28-25
தேசிய அரசாங்கத்தில் மீள்குடியேற்ற  இராஜாங்க அமைச்சராக அவர் கடமையேற்ற வேளை ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில்
யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் கடந்த கால யுத்தத்தினால் மிக பாதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் இன்று வரை பழைய நிலைமைக்கு திரும்பவே இல்லை.காலா காலம் வருகின்ற அரசாங்கங்கள் அவர்களை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் ஏமாற்றியது.ஆனால் அம்மக்கள் தங்களது பதவியேற்றல் மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் சென்ற போதிலும் இம்மக்கள் இன்று வரை அல்லற்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.
இவ்வாறு அல்லற்படும் மக்களின் துயரை நீங்கள் துடைக்க வேண்டும்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லீம் மக்களை கண்ணியப்படுத்துவதற்காக இப்பதவியை உங்களுக்கு வழங்கியுள்ளதாக அறிகின்றேன்.
இதற்கு தரமான ஒருவராக ஹிஸ்புல்லாஹ் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பதை அவர்கள் வரவேற்கின்றனர்.
அத்துடன் செப்டம்பர் 16 ஆம் திகதி முஸ்லீம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் மாமனிதர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்தில் ஹிஸ்புல்லாஹ் பதவி ஏற்றமை அன்னாரை இராஜாங்க அமைச்சர் அரசியல் ஆசானாக ஏற்றுக்கொண்டதனை உணர்த்துகின்றது.
தேர்தலில் தோல்வியுற்ற ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் வேளையில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டம் சிலர் செய்தார்கள்.
ஒருவருக்கு அல்லாஹ் விரும்பினால் அவன் நாடினால் எல்லோரும் எதிர்த்தாலும் ஆட்சி அதிகாரத்தை வழங்குவான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஹிஸ்புல்லாஹுக்கு எம்.பி. பதவி கொடுக்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் இராஜாங்க அமைச்சு இன்று வழங்கப்பட்டுள்ளன.
இனியாவது அல்லாஹ்வில் இவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். வெல்வதற்கு போட்டியிடுங்கள் யாரையும் தோற்கடிக்க போட்டியிடாதீர்கள் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினருக்கு இந்நிலையில் ஆலோசனை கூற விரும்புகின்றேன்.
தலைவர் அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்த அரசியல் சாணக்கியன் ஹிஸ்புல்லாஹ் வட பகுதி முஸ்லீம் மக்கள் விடயத்தில் மிகுந்த அக்கறை காட்டுவார் என நம்புகின்றேன்.