புதிய காத்தான்குடியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கனவனும் மனைவியும் காயம்!

ஜவ்பர்கான்

 

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட புதிய காத்தான்குடியில் நேற்றிரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் காயமடைந்துள்ளனர்.
புதிய காத்தான்குடி மத்திய வீதியிலுள்ள பல சரக்கு கடைக்கு முன்னாள் இந்த மோட்டார் சைக்கிள் விபத்து இடம் பெற்றுள்ளது.

accident-logo

புதிய காத்தான்குடி மத்திய வீதியினால் கனவனும் மனைவியும் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த மோட்டார் சைக்கிள் பல சரக்கு கடைக்குள் புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கனவனும் மனைவியும் படுகாயமடைந்ததுடன் குறித்த பல சரக்கு கடையின் முன் பகுதியில் போடப்பட்டிருந்த தளர்பாடங்களுக்கும் சேதம் எற்பட்டுள்ளது.
காயமடைந்த கனவனும் மனைவியும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.