ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகிய இருவருக்குமிடையில் இம்மாத இறுதியில் நியூயோர்க்கில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் செல்லவுள்ளார்.
அதன்போதே இவ்விரு தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இச்சந்திப்பின் போது விசேடமாக இலங்கை இராணுவ வீரர்களை மாலி ராஜ்யத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் போர்க்குற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தும் போது, இலங்கை இராணுவ வீரர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படையில் இணைத்துக் கொள்ளப்படுவது மிகவும் சாதகமானதொரு விடயமாகுமென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.