ஏறாவூர் பாடசாலைகளுக்கு கிழக்கு முதலமைச்சரினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

 

ஏறாவூர் பாடசாலைகளுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் போட்டோக்கொப்பி இயந்திரம், கணனி, முச்சக்கரவண்டி மற்றும் தளபாடங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று ஏறாவூரில் இடம் பெற்றது.

DSC_2565_Fotor

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏறாவூரில் உள்ள பாடசாலைகளுக்கு விஜையம் மேற்கொண்டபோது பாடசாலை நிருவாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அப்பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று ஏறாவூர் பாடசாலைகளில் இடம்பெற்றன.
DSC_2561_Fotor
அதாவது:
 ஏறாவூர் அறபா வித்தியாலயத்திற்கு கணனி உபகரணங்களும்,
ஏறாவூர் ஷாஹிர் மெளலானா வித்தியாலயத்திற்கு போட்டோக்கொப்பி இயந்திரமும், ஏறாவூர் அல்-முனீறா பாலிகா மகாவித்தியாலயத்திற்கு முச்சக்கரவண்டி மற்றும் தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
சகல மாணவர்களும் சிறந்த கல்வியைப்பெற வேண்டும் என்ற நோக்கில் பாடசாலைகளுக்குத் தேவையான ஆளணிப் பற்றாக்குறை, மற்றும் உபகரணங்கள், கணனி, போட்டோக்கொப்பி வசதிகள் போன்ற வற்றை வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
நாம் அனைவரும் மறணிக்கப் பிறந்தவர்கள் இவ்வுலகில் வாழும் சொற்ப காலத்தில் நாம் என்ன செய்தோம் என்பதனை சிந்திப்பதுடன் என்ன செய்திருக்கிறோம் என்றும் சிந்திக்க வேண்டும். எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அமானிதத்தை சரியாகச் செய்கின்றபோதுதான் மக்கள் திருப்தியடைவார்கள். அதுபோன்று மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டிய தேவை அதிபர் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் தாய் தந்தையருடன் இருப்பதனைவிட அதிக நேரம் பாடசாலைகளிலேயே செலவிடுகின்றனர். 
எனவே உங்கள் கவனிப்பில் இருக்கும் பிள்ளைகளை உங்கள் பிள்ளயாக நினைத்துக் கல்விச் சேவை வழங்குவது ஒவ்வொரு ஆசிரியர்களினதும் கட்டாயக் கடமையாக இருக்கிறது.
அதுபோன்று பல ஏனைய மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கி கற்பிக்க வேண்டும் என்றும் ஒரு நாளைக்கு மூன்று சொற்கள் படிக்கும் ஒரு மாணவன் பாடசாலையை விட்டு வெளியாகும் போது சுமார்  ஒன்பது அல்லது பத்தாயிரம் சொற்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே ஆங்கில மொழிக்கும் சந்தர்ப்பம் வழங்கி அம்மொழியையும் கற்றுக்கொள்ள மாணவர்களும் தங்களைத் தயார் படுத்த வேண்டும் ஆசிரியர்கள், பெற்றோர்களும் அதன் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 DSC_2819_Fotor