பி.எம்.எம்.ஏ.காதர்
அல்-ஹாஜ் எம்.எஸ்.ஐயூப் ஜே.பி மருதமுனையின் சமாதான விரும்பிகளான இருவரின் மறைவு கல்முனை பிரதேசத்திற்கு பேரிழப்பாகும் என மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள்,உலமா சபை,தஃவா இயக்கங்களின் சம்மேளனத்தின் தற்காலிகத் தலைவர் அஷ்செய்க் எப்.எம்.அஹமதுல் அன்ஸார் மௌலானா நழீமி அண்மையில் காலம் சென்ற எம்.எஸ்.ஐயூப் ஜே.பி,ஒய்வு பெற்ற நூலகர் ஏ.எல்.எம்.ஏ.மஜீட் ஆகியோரின் மறைவை யொட்டி வெளியீட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த 12ம் திகதி மரணமடைந்த அல்-ஹாஜ் எம்.எஸ்.ஐயூப் ஜே.பி தமிழ்,முஸ்லிம் நல்லுறவைக் கட்டி எழுப்புவதிலும்,பொதுப் பிரச்சினைகளைத் தீpர்த்து வைப்பதிலும் அக்கறையுள்ள சமூக ஆர்வலராகச் செயற்படடுள்ளார்.இவரது மறைவு தமிழ்,முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு பேரிழப்பாகும்.
அல்-ஹாஜ் எம்.எஸ்.ஐயூப் ஜே.பி அவர்கள் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல்,மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஆகியவற்றின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.மேலும் பயங்கரவாத காலகட்டத்தில் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளின் போது முன்னின்று தீர்த்து வைப்பதில் அதிக அக்கறை காட்டினார்.
ஓய்வு பெற்ற நூலகர் ஏ.எல்.எம்.ஏ.மஜீத் ஜே.பி
கடந்த 2015-09-15ம் திகதி மரணமடைந்த ஓய்வு பெற்ற கல்முனை பிரதேசத்தின் சிரேஷ்ட நூலகர் ஏ.எல்.எம்.ஏ.மஜீத் ஜே.பி அவர்கள் கல்முனை பிரதேசத்தில் நூலகங்களை பாதுகாப்பதிலும்,அபிவிருத்தி செய்வதிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவராவார்.மருதமுனை பொது நூலகத்தில் நீண்ட காலம் நூலகராகக் கடமையாற்றி இந்த நூலகத்தை சிறந்த நூலகமாகக் கட்டி எழுப்புவதில் மிகவும் அக்கறை கொண்டு செயற்பட்டார்.இவரது மறைவு கல்முனை பிரதேச நூலக அபிவிருத்திக்கு பேரிழப்பாகும்.
மேலும் இவர் கல்முனை சமாதான சபையின் முக்கிய பிரமுகராக இருந்து சமாதான சபையின் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக இருந்து பணியாற்றியுள்ளார்.அதே போன்று மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவராக இருந்து புதிய பள்ளிவாசலின் கட்டப் பணியை ஆரம்பித்து வைத்து மரணிக்கும் வரை செயற்பட்டார்.
மறைந்த இந்த இருவரினதும் பாவங்களை மன்னித்து மரணத்தின் பிந்திய வாழ்வு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர் சுவனம் கிடைக்க பிரார்த்திப்பதுடன் இவ்விருவரினது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் சம்மேளனத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அந்த அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.