முதலமைச்சர்ஊடகப்பிரிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரைப் பிரதேச சபைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜையம் ஒன்றினை மேற்கொண்டார். வாகரைப் பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள குறைகள் மற்றும் பின் தங்கிய பிரதேசமாக இருக்கும் அப்பிரதேசத்தின் குறைகளைக் கேட்டறியும் நோக்கில் அங்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்ட விஜையத்தினை மேற்கொண்டார்.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாநகரசபை மற்றும், நகரசபைகள், பிரதேச சபைகளுக்கும் விஜையம் செய்த முதலமைச்சர் மற்றும் அமைச்சின் குழுவினர் வாகரைப் பிரதேச சபைக்கு விஜையம் மேற்கொள்ள முடியாமல் இருந்தனர். அதன் காரணமாக இன்று காலை குறிப்பிட்ட பிரதேச சபைக்கு விஜையம் மேற்கொண்டு அங்குள்ள குறை நிறைகளைக் கேட்டறிந்தனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிழக்கில் எந்த மூலையிலும் எந்த ஒரு பொதுமகனும் நமது சபைகளைப் பற்றி, அங்கு நடைபெறும் மக்கள் சேவை , அல்லது திண்மக்கழிவகற்றல், வெளிச்சம் பொருத்துதல், குடிநீர் வழங்கல், வடிகான் துப்பரவின்மை போன்ற எந்த குறைகளையும் கூறாத நிலைமைக்கு ஒவ்வொரு பிரதேச சபைகளும் தத்தமது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். யாருக்கும் அச்சப்பட்டு சபைகளின் நடவடிக்கைகளை முடக்கிவிட முடியாது. சபை நடவடிக்கைகள் தொடர்பாக அதிக அக்கரையுடன் அனைத்து விடையங்களையும் கவனிக்க வேண்டியவர் சபைகளின் செயலாளர்கள் அவர்களிடமே மக்களின் குறைகள் பற்றி விசாரிக்கப்படும். எனவே ஒவ்வொரு சபை நடவடிக்கைகளும் மிகக் கவனமாக செய்ய வேண்டும் சபைகளுக்குத் தேவையான விடையங்களை மாகாண சபையுடன் தொடர்பு கொண்டு கேட்டுப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர்,
ஒவ்வொரு சபைகளின் செயலாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை வைத்துக்கொண்டு உங்கள் கடமைகளை தைரியாமகச் செய்யவேண்டும். யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. சரியான கடமை செய்யவர்களுக்கான நடவடிக்கையினை உடனே எடுக்க வேண்டும் அப்படி செய்கின்றபோதுதான் பொதுமக்களுக்கான சரியான சேவைகளும் அவர்களுக்குச் சென்றடையும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதுரையில் தெரிவித்தார்.
குறிப்பிட்ட விஜையத்தின் போது முதலமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம், மற்றும் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பிரதிச் செயலாளர் ராபி, மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.