அஸ்ரப் ஏ சமத்
வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளாராக கடமையாற்றிய ஏ.எம்.ஜே சாதிக் நெதா்லாந்து துாதுவராக ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சா் மங்கள சமரவீரவின் ஆகியோரினால் நெதா்லாந்து துாதுவராக நியமிக்கப்பட்டாா். இவா் கடந்த வாரம் நெதா்லாந்து நாட்டின் மண்னா் வில்லியம் அலேக்சாந்தரிடம் தனது நியமனக் கடித்தை கையளித்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சாதீக் கொழும்பு பல்கலைக்கழகத்தில விஞ்ஞான பட்டதாரியாவாா் அத்துடன் வெளிநாட்டு நிர்வாக சேவையில் 1988 வெளிநாட்டு அமைச்சில் இணைந்து கொண்டாா். இவா் ஏற்கனவே பிரேசில் சவுதி அரேபியா ஆகிய நாட்டில் துாதுவராகக் கடமையாற்றியுள்ளாா். அத்துடன் சிங்கப்புர் பல்கலைக்ககழகத்தில் தனது முதுமாணிப்படத்ததையும் பொதுநிருவாக பட்டத்தையும் பயின்றுள்ளாா் அத்துடன் ஹாவா பல்கலைக்கழகத்திலும் பயிற்சி நெறிகளை பயின்றுள்ளாா்.