அசாஹீம்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மிக விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா தெரிவித்தார்.
நேற்று (புதன்கிழமை) காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களைச் சந்தித்து அங்கு நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டார்.
வைத்தியசாலையில் நிலவும் ஆளனிப் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்களின் தேவைப்பாடு போன்ற குறைபாடுகள் தொடர்பாக அடுத்தவாரம் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளை நேரில் சந்தித்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தன்னால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேசத்தை எனது சொந்தப்பிரதேசமாகத்தான் பார்க்கின்றேன் நான் ஒரு போதும் எந்தப் பிரதேசத்தையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்கப்பது கிடையாது நான் எப்போதுமே என் கண்களில் ஒன்ரைப் போன்றே காத்தான்குடியைப் பார்க்கிறேன் அதனால் என்னால் முடியுமான உதவிகளை காத்தான்குடி பிரதேசத்திற்கு செய்வேன் என்றும் அலிசாகிர் மௌலானா மேலும் தெரிவித்தார்.