அசாஹீம்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது கல்வியிலும் அதீத அக்கறை காட்டி சமூகத்தை வழிநடாத்திய மர்ஹூம் MHM Ashraff அவர்களின் 15வது ஞாபகார்த்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஞாபகார்த்த நினைவு தினமும் அஷ்ரப் ஞபகார்த்த புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (16.09.2015) கொழும்பில் இடம் பெற்றது.
130 மாணவர்களுக்கு முப்பது லட்சம் ரூபா நிதி புலமைப்பரிலாக வழங்கப்பட்டதுடன் இனி ஒவ்வொரு வருடமும் இந்த புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு வழங்கப்படும்.
இந் நிகழ்வில் அமைச்சரும் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன், கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சரமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப், கல்வியலாளர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சரும் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன் பாராளுமன்ற சம்பளம் இப் புலமைப் பரிசில் நிதியத்திற்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.