மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் சிரார்த்த தினம்: நிந்தவூரிலும் அனுஷ்டிப்பு.!

 சுலைமான் றாபி , றபீக் பிர்தௌஸ்

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 15வது சிரார்த்த தினம் நேற்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. 

அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் நிந்தவூர் மத்திய குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (16) மாலை நிந்தவூர்   பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர்  பைசால் காசீம் கலந்து கொண்டதோடு, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி ஆர்.யு. அப்துல் ஜலீல்,  நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr எம். ஹம்மாம், கட்சியின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.எ. கபூர், தென்கிழக்குப்  பல்கலைக்கழக  பதிவாளார் அப்துல் சத்தார், முன்னாள் பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எம்.எம். அன்ஸார்,   உறுப்பினர் எம்.ரி. ஜப்பார் அலி,  கல்விமான்கள், உலமாக்கள், கட்சியின் போராளிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்ததனைப் படங்களில் காணலாம். 

20150916_165537_Fotor 20150916_180251_Fotor 20150916_175009_Fotor 20150916_165143_Fotor