சிலி உட்பட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

85590882_chileillapel4640915

மத்திய சிலியில் 8.3 ரிச்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையமே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எனினும் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி பி.ப 7 மணி அளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 7.9 ரிச்டர் என தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் 8.3 ரிச்டர் அளவுடைய பூகம்பமே ஏற்பட்டதாக தெரிவிக்கபட்டது.