இன்று முதல் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பம் !

Ministry_of_Education

புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

தரமான கல்வியை பெற்றுக் கொடுப்பதில் காணப்படும் சிக்கல்களை தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.

தேசிய கல்வி நிறுவகத்தில் இன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் இந்த நடவடிக்கை குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவுபடுத்தவுள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் .

தற்போது காணப்படும் கல்வி முறைமையில் மாணவர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்வி முறைமை ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பௌதீக வளங்களை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் பேராசிரியர் குணபால நாணயக்கார கூறியுள்ளார்.