உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தலைமையில் ஒன்று கூடத் தீர்மானம் !

அஸ்ரப் ஏ சமத்

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவு நாடுபுராவும் உள்ள முஸ்லீம் பிரதேசங்களில் அமைச்சா் பௌசி தலைமையில்  மீள புரணமைக்கப்படுவதற்கு  அமைச்சா் பயிசா் முஸ்தபா, ஹிஸ்புல்லா இணக்கம்.

நேற்று இரவு (16) அமைச்சா் பௌசி யின் வீட்டில் ஒன்று கூடிய ஸ்ரீ.ல.சு.கட்சியின் முஸ்லீம் பிரிவு கூட்டம் நடைபெற்றது.

அடுத்த மாதத்தில்  ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் 136 உள்ளுராட்சி சபைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பிணா்களை அடுத்த  உள்ளுராட்சித் தோ்தலுக்கு முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஒன்று கூடத் தீா்மாணம்.
இதற்காக அமைச்சா் பௌசி தலைமையில்  அமைச்சா் பயிசா் முஸ்தபா, ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பிணா் மஸ்தான், முன்னாள் பா. உறுப்பிணா் ஹூனைஸ் பாருக்  மாகாண சபை உறுப்பிணா்கள் இணைந்து நாட்டின் முஸ்லீம் பிரதேசங்களுக்குச் சென்று  முஸ்லீம் பிரிவை மறு சீரமைப்பது எனத் தீா்மாணிக்கப்பட்டது. 
இதற்காகன முன்மொழிவை அமைசச்சா் பைசா் முஸ்தபா முன்மொழிந்தாா்.
ஜனாதிபதி இந்த நாட்டின் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் தலைவா். அவா் எமது   முஸ்லீம்களை கௌரவிப்பதற்காக 3 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பிணா்கள் பதவி மற்றும் ஒரு கபிணட் அமைச்சா் 2 இராஜாங்க அமைச்சா்  மற்றும் பௌசான் அன்வா் பலஸ்தீன் துாதுவா் பதவிகளை வழங்கியுள்ளாா். ஆனால் முஸ்லீம்கள் ஜ.தே.கட்சிக்கே வாக்களித்தனா்.  ஜனாதிபதி மைத்திரியை தோ்ந்தெடுப்பதற்காக 95 வீதமான முஸ்லீம்கள் வாக்களித்திருந்தனா்.
அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் இங்கு உரையாற்றுகையில் –
எமது கட்சியின் தலைவா் ஜனாதிபதி மைத்திரி இருக்கும் போது எதிா்காலத்தில் உள்ளுராட்சி சபை உறுப்பிணா்கள் ஒருபோதும் ஜ.தே.கட்சியிலோயே வேறு முஸ்லீம் கட்சியில் இணையத் தேவையில்லை.  உள்ளுராட்சி தோ்தல்களில் மக்கள் அந்தந்த பிரதேசத்தில் கட்டாயம் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பாளா்கள். நாம் தனியே உறுப்பிணா்களை மட்டும் தெரிபு செய்யாமல் உள்ளுராட்சி சபைத் தலைவா்கள், மேயா்கள், நகர சபைத் தலைவா்களைத் தோ்ந்தெடுப்பதற்கு நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படல் வேண்டும். என அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தாா்.
இந் நிகழ்வின்போது மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரப் அவா்களது 15வது நினைவு தினத்தினை முன்னிட்டு துஆப் பிராதத்தனை இடம்பெற்றது. அத்துடன் பலஸ்தீன் துாதுவரகச் செல்லும் பௌசான் அன்வருக்கு  முஸ்லீம் பிரிவினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
 10_Fotor 11_Fotor