நீ..!! மீண்டும் எப்போது பிறப்பாயோ…?

நீ..!!

மீண்டும் எப்போது பிறப்பாயோ..???

 
மறைந்தும் மணம் வீசும்
பூவே!

அடக்கியும் எங்களை ஆட்கொள்ளும்
அறிஞரே!
இறந்தும் இயக்கிக்கொண்டிருக்கும்
தலைவரே!
புதைந்தும் பேசப்படும்
பாக்கியவானே!
மக்கியும் மாண்புடன் மிளிரும்
மகானே!
உடல் விட்டு உயிர் பிரிந்தும்
உள்ளங்களில் வாழும்
உத்தமரே!
அடக்கியும் அடங்கா துணிச்சல்

வீரரே!

உதித்த மறு கணமே உதிர்ந்தீரே!
உதிரத்தை உரமாக்கி
உலகத் தலைவர்களை உருவாக்கினாயே!

மரணம் 
உன்னைத் தழுவியதால்
நீ..!!
மரிக்கவில்லை
உன்னவர்கள் மரிப்பதோ!
உன் சிந்தனையில் நீராடும் பல்லாயிரம் பேரை உருவாக்கவே!

இன்றும்
உன் உணர்வுகளோடுதான்
முஸ்லிம் அரசியல் உம்மாவிற்கு உணவளிக்கின்றோம்
உன் கொள்கைகளிலேயேதான்
இன்றும் திடமாக உள்ளோம்

உன் வழிகாட்டல்களியேலேதான்
இன்றும்
திடகாத்திரமாய் நெஞ்சை நிமிர்த்தி
எங்கள் – பாதத் சுவடுகளை
எடுத்து வைக்கிறோம்

உன் சிந்தனைகள் தான்
இன்றும் எங்களை சிந்தனையாய்
எங்களை சிறப்பித்துக்கொண்டிருக்கிறது

உன் வரலாறுகளினை
வாசித்திடினில்!
இரத்தம் கொதிக்கிறது
இதயம் துடிக்கிறது
கண்கள் கலங்குகிறது
ரோமங்கள் சிலிர்க்கின்றனவே!
ஏனோ இது?

கண் எதிரே!
மௌத்தை கண்டும்
கிஞ்சித்தும் கலக்கமில்லாது
கபன் சீலையுடன்
நடைபயின்றவரே!
எப்போதுதான்
உன் பாதச் சுவடுகளை பின்பற்றும்
தலைவர்கள் உருவாகப் போகிறார்களோ!

இறைவா!
இச் சிறப்புற்றோருக்கு
உன்
உயர் சுவனம்
ஜென்னத்துல் பிர்தௌசை
நஸீப் ஆக்கிவிடு!

சுவனத்தி காற்றை நுகர்ந்திடவும்
கனிகளை புசித்திடவும்
அருள் பாலிப்பாயாக!

ஆமீன் ஆமீன்
யாரப்பல் ஆலமீன்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்