பா.உ. சத்துர சேனாரத்னவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் !

 ராகமை பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சிலரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துர சேனாரத்ன மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த மூவர் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

chathura

அத்துடன் சம்பவம் தொர்பாக 05 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில் பொலிஸாரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நேற்று அதிகாலை சத்துர சேனாரத்ன பொலிஸ் நி​லையத்திற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதன் பின்னர் நீர்பொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் சத்துர சேனாரத்னவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஒக்டோபர் மாதம் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சத்துர சேனாரத்னவிற்கு நீதிமன்றத்தினால் நோட்டீஸ் அனுப்பப்பட்டள்ளது.