ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாங்கள் உருவாக்கிய கட்சி ,எவ்வித சவால்கள் வந்தாலும் அதிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டேன் .வச்சிரம் பாய்ந்த மரம் போல் அக்கட்சியில் இருப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார் .
வெளியிலே பரவலாக கதைகள் உலாவருகின்றன மற்றும் சிலருடன் சேர்ந்து புதிய கட்சி உருவாக்கப் போகின்றோம் அமைச்சர் ரிசாத்வுடன் இணையப்போகின்றோமேன்றல்லாம் . நானும் கேள்விபப்டுகின்றேன் .என்னை பொருத்தவரை எனது இறுதி மூச்சு முஸ்லிம் கான்கிரசுக்காகவே இருக்கும் ,வச்சிரம் பாய்ந்த மரமாகவே நான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார் .
முஸ்லிம் காங்கிரசின் செயற்பாடுகளில் ஒதுங்கிருக்கிண்றீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நான் இப்போதும் தாருஸ்ஸலாமில் இருந்து கட்சி நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு கொண்டுயிருக்கின்றேன் என்றார்.