தேசிய விளையாட்டு விழாவில் மட்டு.சிவானந்தாவிற்கு மல்யுத்த்தில் வெள்ளி பதக்கம் !

ஜவ்பர்கான்

 பாடசாலைகளுக்கிடையேயான தேசிய விளையாட்டு விழாவில் மல்யுத்தப்போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை வெள்ளி பதக்கத்தை சவீகரித்துள்ளது.

வெற்றியீட்டிய பாடசாலை மாணவர் அணியினை வரவேற்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.

DSC_0253_Fotor
குறித்த பாடசாலையைச் சேர்ந்த அணியில் எஸ்.கரிஜன், ரி.பார்த்தீபன், என். நிசோத், என். பிரகாஷ், எஸ்.ருவிகரன் ஆகிய 5 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று பாடசாலைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தாஜீ அவர்களிடம் ஆசிபெற்ற பின்பு பாடசாலை நோக்கி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

DSC_0256_Fotor
மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் எஸ். பாஸ்கரன், பாடசாலையின் அதிபர் கே.மனோராஜ் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
DSC_0265_Fotor