ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் மறைவு தின்தை அனுஷ்டிப்பது தொடர்பிலான நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் நஸீரின் உரை !

அபு அலா 

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை உருவாக்கி இன்று இலட்சக்கணக்கான போராளிகளையும் உறுவாக்கிவிட்டு மறைந்த ஒரு சாணக்கி தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவை எம்மால் ஜீரனிக்க முடியாதவையாகவும், மறக்க முடியாதவையாக உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், மத்திய குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

nazeer. 

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்எம்.அஷ்ரபின் 15வது ஆண்டு நிறைவு தினத்தை நினைவுகூறுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்றிரவு (14) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அவரது அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற தனிநபர் எமது சமூகத்தின் மீதுகொண்ட அன்பு, பற்றின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை உருவாக்க அன்று அவர் தனது உயிரையும் துச்சமாக மதித்து தனது உதிரத்தை வியர்வையாக சிந்தி, குடும்பங்களையும் மறந்து ஒரு போராட்டத்துக்கு மத்தியில் உறுவாக்கிய இயக்கம்தான் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கமாகும்.

 

இதனை உருவாக்க ஆயுதத்தால் துளைக்க முடியா பல தடைச்சுவர்களை வாயால் தகத்தேரிந்த கல்விமானாகும். அவர் எதிரிகளையும் 
நாவார பாராட்டும்போது இனவாதம் தலை கவிழ்த்து பிரதேச வாதமும் ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு அவரின் செயற்பாடுகள் அன்றிருந்தது. அன்னாரின் மறைந்த நாள் நானனும் நீயும், நீயனும் நானும் நாமான நாமம் மறைந்த நாள்தான் செப்டம்பர் 16 ஆம் திகதியாகும். எமது மாபெரும் தலைவர் மறைந்து 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. அந்த துக்கரமான தினத்தை நாம் எதிர்கொள்ளப்போகின்றோம். 

 

எமது சமூகத்தைப் பற்றிய சிந்தனையை அள்ளாஹ் அன்று அஷ்ரப் என்ற எமது பெரும் தலைவருக்கு ஒரு உதிப்பை வழங்கியதன் காரணத்தால் அவர் அன்று எடுத்த போராட்டம் இன்றுவரை, இன்றைய தலைவர் றவூப் ஹக்கிமால் வெற்றிகண்டு செல்லப்படுகின்றது. மறைந்த மாமனிதர் பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவர்தான் எமது இன்றைய தலைவர் றவூப் ஹக்கீமாகும். எமது பெரும் தலைவரின் மறுவடிவம் எடுத்து வந்தவர்தான் இன்றைய தலைவர் றவூப் ஹக்கீம் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் எமது கட்சிக்கு தலைவராக கிடைக்கப்பெற்றதை என்னி நாம் அள்ளாஹ்வுக்கு சுக்குர் செய்யவேண்டும். 

 

அள்ளாஹ்வின் உதவியால் இன்றைய எமது தலைவர் றவூப் ஹக்கீமின் பெரும் சானக்கியத்தினால் எமது கட்சியும், சமூகமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இக்கட்சி பாதுகாக்கப்படவில்லை என்றால் இந்த நஸீர் ஒரு தவிசாளராகவோ அல்லது மாகாண சபை உறுப்பினராகவோ இன்று உங்கள் முன் வந்திருக்க முடியாது. அவரின் சானாக்கியத்தினால் இக்கட்சி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 

 

இக்கட்சிக்கு குருதியை பசளையாக்கி, கண்ணீரை தண்ணீராக்கி வளர்த்த இயக்கத்தின் தலைவரின் அந்த துக்க தினத்தை அனுஷ்டிக்க அட்டாளைச்சேனை மசூர் சின்னலெப்பை சந்தை சதுக்கத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளோம். அன்றைய தினத்தில் அந்த மாமனிதருக்காக கத்தமுல் குர்ஆன் ஓதி விஷேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தி அவரின் ஈடேற்றத்துக்காக எல்லோரும் பிரார்த்தனை புரிவோம் என்றார்.