உமர் அலி, சுலைமான் றாபி
அண்மையில் சுகாதார, சுதேஷ மற்றும் உள்நாட்டு மருத்துவ பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இன்று (14) இலக்கம் 385, பத்தேகம விமலவன்ச மாவத்த, சுவசிரிபாய, கொழும்பு -10 இல் அமைந்துள்ள தனது அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம், சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் அனுர ஜெயவிக்கிரம, இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம். பௌசி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், முன்னாள் பாராளுமன்ற ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.