20000 குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்து நிலையம் குடிநீர் வசதி—போதாது என மக்கள் புகார் !

ஜவ்பர்கான்
 மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தேவைக்கு போதாதுள்ளதாகவும் இதனால் குடிநீருக்கு பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

S2620022_Fotor
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் வசதியை இழந்துள்ளன.அவர்களுக்கான குடிநீர் வசதியை அனர்த்த முகாமைத்துவ நியைம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

S2620019_Fotor
இம்மாவட்டத்தில் வவுணதீவுஇ கொக்கடிச்சோலைஇ வெல்லாவெளிஇ கிரான்இ செங்கலடி ஆகிய பிரதேசங்கள் வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுயள்ளன.

S2620026_Fotor
இப்பிரதேசங்களுக்கு மாவட்ட அனர்ர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக பௌசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் என்.இன்பராஜன் தெரிவித்தார்.

S2620028_Fotor