தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது நிறைவை முன்னிட்டு ஆணையாளர் அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று மாலை விஜயம் !

அபு அலா 

 தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது நிறைவும், இஸ்லாமிய சமய நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (13) சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலினி விக்கரமரத்தன தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

2_Fotor

மேலும் இந்நிகழ்வில், உதவி தேர்தல் ஆணையாளர் முஹம்மட், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெஹ்எம்.ஐ.அமீர், இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையத்தின் (மெஸ்பரோ) பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் உள்ளிட்ட அரச திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

DSC01109_Fotor

இந்நிகழ்வில், சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் பேஸ் இமாமினால் விஷேட துஆ பிரார்த்தனையும், இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் (மெஸ்பரோ) அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு “ஜனநாயக மனிதன்” என்ற பட்டமும் சூட்டி பொண்னாடை போர்த்தி ஞாபகச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

DSC01114_Fotor

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மெஸ்பரோ அமைப்பு தொடர்பிலும், அதன் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரிடம் மிக விரிவான கலந்தரையாடல் ஒன்றையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.