ஜவ்பர்கான்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் நல்லூர் ஆலய உற்சவத்திற்குச் சென்ற தனியாக வசித்த பெண்ணொருவரின் வீடடை உடைத்து அலுமாரியிலிருந்த தங்க மாலைஇ மோதரம்இ தோடு உட்பட நகைகள் மட்டும் இந்தியாவிலிருந்து விறபனைக்காக கொண்டுவந்த புதிய ஆடைகள் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருக்கள் மடம் வீதி ஓந்தாச்சிமடத்தில் விதவைப்பெண்ணாக தனியாக வசித்துவந்த வேல்முருகு சாந்தா என்ற 57 வயது பெண் வீடடை; மூடிவிட்டு இம்மாதம் 3ம் திகதி நல்லுர் ஆலய உற்சவத்திற்காக சென்றுள்ளார்.
முன்வீட்டாரிடம் வீட்டை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.வேறு இடத்தில் வசித்துவரும் குறித்த பெண்ணின் மகனிடம் வீடு உடைக்கப்ப்;ட தகவலை முன்வீட்டார் தெரிவித்ததை அடுத்து அவர் தனது தாய்க்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இன்றுகாலை கோயிலிருந்து ; வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்கதவுகள் உடைக்கப்பட்டு மேற்படி பொருட்கள் களவாடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
ஸ்தலத்திற்து விரைந்த மட்டக்களப்பு மாவட்ட சொகோ பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டது.