அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃப்ளொய்ட் மேவெதர், ஒரு தோல்விகூட இல்லாமல் 49 வெற்றிகளைப் பெற்று மறைந்த பழம்பெரும் குத்துச்சண்டை வீரர் ராக்கி மார்சியானோவின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.
மேவெதர் தனது 19-ஆண்டு குத்துச் சண்டை வாழ்க்கையில் ஐந்து வெவ்வேறு எடைப் பிரிவுகளில் உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
லாஸ் வேகாஸில் நடந்த போட்டியில் மேவெதர், சக அமெரிக்கர் அன்றூ பேர்ட்டோவை நடுவர்களின் ஒருமனதான தீர்ப்பு மூலம் வெற்றிகொண்டுள்ளார்.
1996-ம் ஆண்டில் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் மேவெதர் முழுநேர குத்துச்சண்டை வீரராக மாறினார்.
பேர்ட்டோவை போட்டியில் சந்திக்கும் வரை, இந்தப் போட்டியே தனது கடைசிப் போட்டி என்று மேவெதர் தொடர்ச்சியாக கூறிவந்தார்.
ஆனால், மார்சியானோவின் சாதனையை முறியடிப்பதற்காக அவர் இன்னொரு முறை குத்துச்சண்டை களத்திற்கு செல்வார் என்று நிபுணர்கள் பலரும் கருதுகின்றனர்.