நீண்ட காலம் விண்வெளியில் இருந்த வீரர் பூமி திரும்பினார் !

 சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிவந்த ரஷ்ய விண்வெளி வீரரான கென்னடி பதல்கா பூமி திரும்பியுள்ளார்.

ஐந்து முறை விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர், விண்வெளியில் அதிக காலத்தை கழித்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

150912041948_gennady_padalka_640x360_ap_nocredit

 

இதுவரை 879 நாட்கள் அவர் விண்வெளியில் கழித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்த சாதனையை படைத்தவர், பதல்காவைவிட இரண்டு மாதங்கள் குறைவாகவே விண்வெளியில் இருந்திருக்கிறார்.

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் பூமி திரும்பிய அவர் கஜகிஸ்தானில் பத்திரமாக தரையிறங்கினார்.