சிறைக்கைதிகளும் மனிதர்களே…சிறைக்கைதிகள் தமது உறவுடகளுடன் ஒருநாள் நிகழ்வு!

ஜவ்பர்கான்

 

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி சங்கமும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் இணைந்து ஏற்பாடு செய்த ” சிறைக்கைதிகளும் மனிதர்களே…அவர்களுக்கு உதவுவோம்’..எனும் தெரினப்பொருளிலான சிறைக்கைதிகள் தமது மனைவிஇ பிள்ளைகள் மற்றும் உறவுகளுடன் ஒரு நாளைக் கழிக்கும் விஸேட நிகழ்வு இன்று மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.அக்பர் தலைமையில் நடைபெற்நறது.

images

 

தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகள் தமது உறவுகளுடன் ஒன்றாக அமர்ந்திருந்து பகலுணவு உண்ணும் சந்தர்பபமும் வழங்கப்பட்டிருந்தது.
சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு பாசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
விளையாட்டுப் போட்டியில் வெற்றிnபெற்ற சிறைக்கைதிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
சிறைச்சாலை நலன்புரி சங்க தலைவர் என்.பீ.ரஞ்சன் செயலாளர் வி.பிரதீபன் பாபு வைத்திய நிபுணர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் தமது உறவுகளுடன் கைதிகள் உணவருந்திய காட்சி மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.