ரோஸி சேன­நா­யக்­க­வுக்கு பிர­தமரின் ஊடகப் பேச்­சா­ளர் பதவியும்; பிர­தமர் செய­ல­கத்தின் உதவி தலைமைப் பத­வியும்!

 

பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவின் ஊடகப் பேச்­சா­ளர் பதவியும் பிர­தமர் செய­ல­கத்தின் உதவி தலைமைப் பத­வியும் முன்னாள் அமைச்சர் ரோஸி சேன­நா­யக்­க­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

Unknown

 

இது குறித்து ரோஸி சேன ­நாயக்க கருத்து தெரி­விக்­கையில்,

என்­மீது நம்­பிக்கை வைத்து இந்த பத­வியை வழங்­கி­ய­மைக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எனது நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கிறேன். கடந்த இரு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எனது பங்­க­ளிப்பை செய்து வரு­கின்றேன்.

விசே­ட­மாக பெண்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் பல்­வேறு பணி­களை முன்­னெ­டுத்து வந்­துள்ளேன். கடந்த காலங்­களில் நான் கட்­சிக்­கா­கவும் நாட்டு மக்­க­ளுக்­கா­கவும் செய்த சிறந்த சேவைக்­கா­கவும் கட்­சியும் கட்சித் தலை­வரும் எனக்கு வழங்­கிய கௌர­வ­மா­கவே இந்த பத­வி­யினை கரு­து­கிறேன்.

எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள இந்த பதவியினை மிகவும் நேர்த்தியாகவும் பொறுப்புடனும் செய்வேன் எனவும் தெரிவித்தார்.