கருங்கொடியூர் நுங்குணி
அதாஉல்லாவின் பொழக்கடையில் சீச்சிச், சீச்சி அரசியல் மங்கு பொறக்கித் தின்றவர்களெல்லாம் அவரின் தோல்வியைத் தமது வெற்றியாகக் கருதிக் கொண்டு ஹக்கீமிடம் பெயரெடுக்க முற்படுகின்றனர்.அமைச்சர் ஹக்கீமை இவர்களைப் போன்ற சில்லறைகளால் ஏமாற்ற முடியாது. ஹக்கீமின் அரசியல் இருப்பில் வலது கரமாக இருந்தவர் எமது தலைவர் அதாஉல்லா என்பதை முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரம் நன்குணரும்.என்று முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.ஸபீஸ் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
சம்பந்தம் இல்லாமல் தான்தோன்றித் தனமாக வளர்ந்த சிலர் புலிவாலிலும் தொங்கியவர்கள் ஹக்கீமை நடுரோட்டில் குந்தவைத்தவர்கள் பிரதேச சபையின் வளங்களைத் திட்டமிட்டுக் கொள்ளையடித்தவர்களெல்லாம் தம்மை புண்ணியஷீலர்களாகக் காட்ட முற்படுகின்றனர்.இவர்களின் முகத்தை கருங்கொடியூர் கண்ணாடியில் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
அதாஉல்லா தோற்கவுமில்லை, துவளவுமில்லை. 15 வருட ஓய்வில்லாத மக்கள் பணிக்கு இறைவனாகப் பார்த்துக் கொடுத்த நல்வரம். இந்த நாட்டின் பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்க சுமார் 30 தேர்தல்களில் தோல்வி கண்டவர். ஆனால் அவருடைய பொறுமை இன்று அவரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியுள்ளது.
அரபு இஸ்லாமிய வரலாற்றில் எத்தனை சிலுவைப் போர்கள் நடந்துள்ளன. கொடுமைகளைக் கண்டு அஞ்சுபவரகள் நாமல்ல நாம் குதிரைக் காறர்கள். முடியுமானால் அக்கரைப்பற்று மாநகர சபை, பிரதேச சபை ஏதாவதொரு சபையில் ஒரு வட்டாரத்தில் எம்மொடு போட்டியிட்டு யாராவது வென்று காட்டட்டும். முடியாது அது குதிரைக் கொம்பாகும்.
வுந்த காகம் இருந்த வக்காவைத் துரத்த எடுக்கும் முயற்சியை எதிர்வரும் தேர்தல்களில் எம்மக்கள் காட்டுவர். நீண்ட ஆட்சியின் வரட்சியும், புகழ்ச்சியும் எமக்கு வீழ்ச்சியைத் தந்துள்ளதை நாம் ஒப்புக்கொள்கிறோம். அது எமது நன்றிக் கடனுக்காக நாம் உவந்து பெற்ற தோல்விதான்.
ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவுடன்தான் ஹக்கீமும் இருந்தார். தபால் வாக்களிப்பும் முடிந்த பின்னர் டிசம்பர் 28ல் தான் ஹக்கீம் எம்மோடு வந்து இணைந்தார் என்று அமைச்சர் தயா கமகே கூறியதை எல்லோரும் அறிவர். ஆனால் மேலும் 10 நாட்கள் மஹிந்தவுடன் நம் தலைவர் இறுதி வரை இருந்து விட்டு வந்தார். துரோகம் செய்வதைவிட தோல்வி அடைவது மேலானது. முனாபிக்தனம் புகழுக்குக் குடை பிடித்தாலு ஒரு போதும்; இறைவனிடத்தில செல்லாது.
எமது தலைவர் அதஉல்லா அதிகாரத்தில் இருந்த காலம் வரை ஹோர்ஸ் பவரில் அதிவேகமாகப் பயணம் செய்தார். இனி வருபவர்கள் முயலை முந்திய ஆமையாக வருவார்கள். காலம் இன்னும் இருந்தால் கோடையும் மாரியும் மாறி வரும். தோல்வியைத் தொடர்ந்து வெற்றி வரும். புறப்படுங்கள் தொழர்களே நமது குதிரையின் லாடன் கிழப்பும் புழுதிக்கும் இவர்கள் தகுதி பெறமாட்டார்கள்.