ஜவ்பர்கான்
மட்டக்களப்பு நகரில்; மணித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்ட 6 வர்த்தகர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரை சபை பிரதம பொது சுகாதார பரிசோதகர் என்.தேநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் பிரபல உணவகங்கள்இ சிற்றுண்டி சாலைகளஇ; பழக்கடைகள் உட்பட உணவுப்பொருள் விற்பனை மையங்கள் சுகாதார பகுதியினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது மனித பாவனைக்குதவாத பெருமளவு உணவுப்பொருட்கள் மற்றும் பழுதடைந்த உணவுப்பொருட்களை தயாரிக்கும் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
குறித்த வர்த்தகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த அபராதத்தை விதித்தமை குறிப்பிடத்தக்கது.