ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் எழுந்த சிக்கல் தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில், சிவனொளிபாத மலை எந்த மாகாணத்துக்குரியது என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அளவையியல் திணைக்களத்தின் படி இது சப்ரமகமுவ மாகாணத்துக்கு உரியது.
எனினும் வரைபடங்களின் படி இது மத்திய மாகாணத்துக்கு உரியதாக கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், இது குறித்து எமது செய்திப்பிரிவுக்கு விளக்கமளித்த பரீட்சைகள் ஆணையாளர், இரண்டு விடைகளுக்கும் மாணவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உண்மையில் சிவனொளிபாதமலை சப்ரகமுவ மாகாணத்துக்கே உரியது.
எனினும் சில ஆசிரியர்கள் கூகுள் மெப் ஐ பார்த்து, அது மத்திய மாகாணத்துக்கு உரியது என்று மாணவர்களுக்கு புகட்டியுள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மாணவர்களின் நலனுக்காக இந்த வினாவுக்கு இரண்டு பதில்களுக்குமே புள்ளி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.