குறைந்­தது 10,000 சிரிய அக­தி­களை ஏற்றுக் கொள்­வ­தற்கு தயா­ராக வேண்டும் – பராக் ஒபாமா

Unknownஅமெ­ரிக்­கா­வா­னது எதிர்­வரும் வரு­டத்தில் குறைந்­தது 10,000 சிரிய அக­தி­களை ஏற்றுக் கொள்­வ­தற்கு தயா­ராக வேண்டும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா அழைப்பு விடுத்­துள்­ள­தாக வெள்ளை மாளிகைப் பேச்­சாளர் தெரி­வித்தார்.

 

சிரி­யா­வி­லான மோதல்கள் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு அமெ­ரிக்­காவில் மீள் குடி­ய­மர்த்­தப்­ப­டு­வ­தற்கு 1,500 சிரி­யர்­க­ளுக்கே அனு­ம­தியளிக்­கப்­பட்டுள்ள நிலையில், இந்தத் தொகை கணி­ச­மான அளவில் அதி­க­மாகும்.

எனினும் இந்த வருடம் ஐரோப்­பாவை வந்­த­டைந்­துள்ள 340,000 க்கு அதி­க­மான அக­தி­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இந்தத் தொகை மிகவும் குறை­வாக கரு­தப்­ப­டு­கி­றது.

சிரி­யாவில் மோதல்கள் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு அமெரிக்கா மேற்­படி அக­திகள் தொடர்பில் 4 பில்­லியன் டொலரை உதவித் தொகை­யாக வழங்­கி­யுள்­ளது.
ஏற்றுக் கொள்ளும் அக­திகள் தொகை­யி­லான இந்த அதி­க­ரிப்பு, மோதல்கள் இடம்­பெற்று வரும் இடங்­க­ளி­லி­ருந்து மக்­களை ஏற்றுக் கொள்­வ­துடன் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை வழங்­கு­வ­தற்­கான அமெ­ரிக்­காவின் அர்ப்­ப­ணிப்பை அதி­க­ரிப்­ப­தாக உள்­ள­தாக வெள்ளை மாளிகை ஊடக செய­லாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட் தெரி­வித்தார்.

அமெ­ரிக்­கா­வுக்கு மேல­தி­க­மாக 10,000 அக­தி­களை அனு­ம­திப்­ப­தற்­காக குறிப்­பி­டத்­தக்க நிதியை அமெ­ரிக்கா ஒதுக்­கீடு செய்ய வேண்­டி­யுள்­ள­தாக அவர் கூறினார்.
”இந்தப் பிரச்­சி­னையின் அளவு குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ள­தாக நாம் அறி­கிறோம்” என ஏர்னெஸ்ட் தெரி­வித்தார்.

அக­திகள் அமெ­ரிக்­கா­வுக்கு வரும் போது அவர்கள் தொடர்பில் பாது­காப்புச் பரி­சீ­ல­னை­களை மேற்­கொள்­வ­தற்கு 12 முதல் 18 மாத காலம் எடுக்கும் எனத் தெரி­வித்த அவர், அமெ­ரிக்­காவின் பாது­காப்­பிற்கே முத­லிடம் கொடுக்­கப்­படும் என்று கூறினார்.

இந்­நி­லையில் ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர்கெல், தனது நாடு 800,000 சிரிய அக­தி­களை ஏற்கத் தயா­ராகி வரு­வ­தாக தெரி­வித்­துள்ளார்.அதே­ச­மயம் தனது நாடு 20,000 சிரிய அக­தி­களை ஏற்­க­வுள்­ள­தாக பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமெரோன் குறிப்­பிட்­டுள்ளார்.

ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலையம் 4 மில்­லியன் சிரிய அக­தி­களைப் பதிவு செய்­துள்­ள­துடன் 2016 ஆம் ஆண்­டுக்குள் 130,000 சிரிய அக­தி­களை மீளக் குடி­ய­மர்த்த உல­க­மெங்­கு­முள்ள அர­சாங்­கங்­களின் உத­வியைக் கோரி­யுள்­ளது.

அமெ­ரிக்­கா­வுக்குள் 65,000 சிரிய அக­தி­களை மீளக்­கு­டி­ய­மர்த்த அனு­ம­திக்­கு­மாறு 14 அமெ­ரிக்க செனட்­சபை உறுப்­பி­னர்கள் ஒன்­றி­ணைந்து கடந்த மே மாதம் ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­வுக்கு கடி­த­மொன்றை அனுப்பி வைத்­தி­ருந்­தனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன், குடியேற்றவாசிகள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடும் முகமாக ஐக்கிய நாடுகள் பொது சபையில் உலகளாவிய அவசரக் கூட்டமொன்றை எதிர்வரும் மாதம் கூட்ட அழைப்பு விடுத்துள்ளார்.