சிங்கப்பூர் தற்போதைய பிரதமர் லீ லூங் மீண்டும் பிரதமராக தெரிவு !

 

சிங்கப்பூரில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் மக்கள் செயற்பாட்டுக் கட்சி (PAP) வெற்றிபெற்றுள்ளது.

images

இதனால், தற்போதைய பிரதமர் லீ லூங் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொதுத்தேர்தலில் சிங்கப்பூரை வடிவமைத்த முன்னாள் பிரதமர் மறைந்த லீ குவான் யூ வின் மக்கள் செயற்பாட்டுக் கட்சியும் தொழிலாளர் கட்சியும் மோதின.

இதில் மக்கள் செயற்பாட்டுக் கட்சி மொத்தமுள்ள 89 இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இதனையடுத்து, தற்போதைய பிரதமரும் முன்னாள் பிரதமர் லீ குவானின் மகனுமான லீ லூங் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 69.86 சதவீத வாக்குகள் அவரது கட்சிக்குக் கிடைத்துள்ளன.