காத்தான்குடியில் முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் வசனங்கள் அடங்கிய ஸ்டிகர்கள் ஒட்டும் விஷேட நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வு-

 

பழுலுல்லாஹ் பர்ஹான்

 

சமூக மட்டத்தில் சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்ளை தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை அபிவிருத்திக்கான ஒன்றினைவு எனும் தொனிப்பொருளில் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் வசனங்கள் அடங்கிய ஸ்டிகர்கள் ஒட்டும் விஷேட நிகழ்ச்சித் திட்டம் நேற்று 10 வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாகவுள்ள பஸ்மலா சதுக்க சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட நிகழ்சித் திட்ட ஆரம்ப நிகழ்வில் (யுனிசெப்) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள்,மட்டக்களப்பு சர்வோதயத்தின் திட்ட உத்தியோகத்தர் ரீ.மயூரன் உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

இதன் போது வீதியால் சென்ற முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் ஸ்டிகர்கள் போக்குவரத்து பொலிசாரினாரினால் ஒட்டப்பட்டது.

 

இங்கு முச்சக்கர வண்டிகளுக்கு ஒட்டப்பட்ட வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் ஸ்டிகர்களில் வீதிச்சமிஞ்சைகளை மதித்து நடக்கும் சாரதிகளை பாராட்டுகின்றோம்,வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்போம் விபத்துக்களை தவிர்ப்போம்,சாரதிகளே அதிக வேகம் வாழ்வின் ஆனந்தங்களை இல்லாது செய்துவிடும்,சாரதிகளே உங்களின் கவனமின்மை ஊரவரின் உயிரைக் குடிக்கும் போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.

 

மேற்படி முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் வசனங்கள் அடங்கிய ஸ்டிகர்கள் ஒட்டும் விஷேட நிகழ்ச்சித் திட்டத்திற்க்கு (யுனிசெப்) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், மட்டக்களப்பு சர்வோதயம், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவு என்பன இணைந்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5-DSC07275_Fotor 7-DSC07290_Fotor9-DSC07285_Fotor