ஏ.எஸ்.எம்.ஜாவித்
புத்தளம் பத்துளு ஓயா பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (06) மத்ரஸா மண்டபத்தில் அரபிக் கல்லூரியின் நிறுவுனர் அல்-ஹாஜ் முஹமட் தம்பி மற்றும் கல்லூரியின் சிரேஷ்ட ஆலோசகர் அல்-ஹாஜ் இல்யாஸ் அப்துல் கரீம் ஆகியோரின் வழிகாட்டலில் கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் முஹமட் முக்தார் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக இந்தியாவின் குவாசி நீதிபதியும் பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் பிரதான ஆலோசகருமான அஷ்-ஷெய்த் பத்துல்லா முத்துக்கோயா தங்கள் அவர்களும், கௌரவ அதிதிகளாக அஷ்-ஷெய்யத் முஹமட் காசிம் தங்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன், அரபிக் கல்லூரியின் நிருவாக சபை உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாகிகள், அரபிக் கல்லூரி அதிபர் மௌலவி புவாத் (ஜலாலி) உள்ளிட்ட கல்லூரியின் உஸ்தாத்மார்கள், உலமாக்கள், புத்தி ஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் கொழும்பு-11 ஜாமியுல் அல்பர் மஸ்ஜிதின் இமாம் ஷெய்யத் அஹமட் முத்துவாப்பா ஆலிம் பாசி நிகழ்வில் விஷேட பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதன்போது அல்குர்ஆனை முழுமையாக ஓதி மனனம் செய்த மாணவர்களான ஏ.முஹமட், எம்.ஆர்.அப்துல் ஹாலிக், டி. மொஹமட் ஸாஜித், எம்.ஆர்.முஹமட் யூசுப், ஜே.ஏ. முஹமட் ஆதில், எம்.என்.எம். முஹமட் ஸைய்த், எம்.எம்.அஸ்ஹர் ஆகியோர் அதிதிகளால் ஹாபிழ் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அரபிக் கல்லூரியின் பொருலாளர் அன்வர் ஹாஜியாரின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது பிரதம அதியாக கலந்து கொண்ட அஷ்-ஷெய்த் பத்துல்லா முத்துக்கோயா தங்களினால் புதிய மாணவர்களுக்கு கிதாபு ஓதும் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.