அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் !

 

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்பதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Unknown

பரீட்சை வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

நாடலாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 23 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை வினாத்தாள்கள் திருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகளுக்காக 08 பாடசாலைகள் முழுமையா பயன்படுத்தப்படுவதாகவும் 15 பாடசாலைகள் பகுதி அளவில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று இலட்சத்து 40 ஆயிரத்து தொளாயிரத்து 26 பரீட்சார்த்திகள் இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.