கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயாக பிரதீப் நிலங்க தேல தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புதிய தியவடன நிலமேயைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று பிற்பகல் நடைபெற்றது.
கண்டி பௌத்த மத்திய நிலையத்தில் இந்த தேர்தல் நடைபெற்றதாக பௌத்த விவகார ஆணையாளர் சந்திரபிரேம கமகே தெரிவித்தார். புனித தந்ததாதுவிற்குப் பொறுப்பாளராகவும் தலதா மாளிகையின் பிரதான நிர்வாகியாகவும் செயற்படுகின்ற தியவடன நிலமே பதவிக்காக இம்முறை நால்வர் போட்டியிட்டனர்.
பிரதீப் நிலங்க தேல, முன்னாள் தியவடன நிலமே நெரஞ்சன் விஜயரத்ன, ஶ்ரீ நாத ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே கயான் ஹீன்கெந்த மற்றும் முன்னாள் பஸ்நாயக்க நிலமே சுதந்த சேனாநாயக்க ஆகியோர் இம்முறை தேர்தலில் களமிறங்கினர்.