மட்டு.மாவட்டத்தில் கடும் வரட்சியால் நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் பல முற்றாக வற்றி விட்டன !

ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் பெருமளவில் வற்றிவிட்டதாக மாகாண நீர்ப்பாசன திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் எம்.வடிவேல் தெரிவித்தார்.

S2620010_Fotor
இம்மாவட்டத்தில் 14 நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் உள்ளன.அவற்றுள் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் 5 குளங்களும் ஏனைய இடங்களிலும் 9 குளங்களும் உள்ளன.இவற்றுள் மதுரங்கேணி பெரிய குளம்இ மகிழடித்தீவு குளமஇ பழுகாமம்குளம்இ சேவகப்பற்று குளம்இ போரதீவுகுளம்இ மகிழூர் ஆகிய குளங்கள் முற்றாக வற்றிவிட்டன.

S2620012_Fotor
கடுக்காமுளை குளம் தற்போது 5 அடி தண்ணீரை மாத்திரம் கொண்டுள்ளது.அதே போன்று புழுகுணாணைஇ அடைச்சகல் போன்ற குளங்களும் பெருமளவில் வற்றிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

S2620015_Fotor
குறித்த குளப்பிரதேசங்கள் வரட்சிகாரணமாக பெரிதும் வரண்டு காணப்படுவதுடன் வயல் நிலங்களும் வரண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

S2620017_Fotor