அஸ்ரப் ஏ சமத்
தேசிய கலந்துறையாடல்கள் கபிணட் அமைச்சராக கொழும்பில் முதல் தமிழ் பிரநிதியாக மனோ கனேசன் இன்று காலை (08) ராஜகிரியையில் உள்ள மொழிகள் தேசிய நல்லிணக்க அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இந் நிகழ்வில் மலையக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பிணா்கள் அந்த அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா் மனோ –
இந்த அமைச்சு பற்றி நான் நேற்று பிரதமந்திரியுடன் கலந்துரையாடினன். இந்த அமைச்சின் முலம் சிவில் சமுகம், மற்றும் மதத் தலைவா்கள் ஏனைய இனங்களும் ஜக்கியப்படுத்தும் ஒரு அமைச்சாகும்.
இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் குரோதம், மத ரீதியாக இனத்துவேசங்களை உண்டுபன்னுத்ல் போன்ற நடவடிக்களை .இனி செயல்படுத்த முடியாது. வடக்கையும், தெற்கையும் கிழக்கை மலையகத்தையும் ஒன்றினைக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.
மொழி ரீதியாக இருக்கின்ற சகல பிரசச்சினைகளை நாம் தீா்த்தல் வேண்டும். இந்த நாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவா் நாட்டின் ஜனாதிபதியாகும், ஜ.தே.கட்சியின் தலைவா் ரணில் விக்கிர்மசிங்க பிரதமராகும், எதிா்கட்சித் தலைவராக இரா சம்பந்தனும் ஜே.வி.பி அநுரகுமார திசாநாயக்க எதிா்கட்சியின் பிரதம கொரடாகவாகவும் பதவி வகிக்கின்றனா். ஏனைய சிறுகட்சிகளின் தலைவா்கள் அமைச்சராகவும் உள்ள இந்த அரசில் இலங்கை மக்களினதும் அபிலாசைகள் திடம்பர முன்னெடுக்கப்படும். இதனையே எமது மக்களும் எதிா்பாா்த்தனா்.
கடந்த மகிந்த ராஜபக்கச அவா்களின் காலத்தில் எமது ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்க ஆகியோா்கள் கொள்ளப்பட்டாா்கள். அத்துடன் வெள்ளை வேன் கலாச்சாரம் இருந்தது. இத்தனைக்கும் எதிராக கொழும்பிலும் நான் நடு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினேன். அத்துடன் எமக்கு உதபிய என்.ஜி.ஓ பிரநிதிகளையும் துரத்தி தாக்கினாா்கள். அவா்கள் இனி பயப்படத் தேவையில்லலை. தமது மக்களுக்கு செய்யக் கூடிய சேவையை தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும்.