நிவாரணங்களுடன் சென்ற குழுவில் வைத்திய நிபுணர்கள் நால்வர் உள்ளிட்ட 48 இராணுவ உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ உபகரணங்கள், மின்பிறப்பாக்கிகள், குடிநீர் போத்தல்கள், மருந்து வகைகள் என்பனவும் நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நிவாரணக் குழுவை ஏற்றிய மேலும், 2 விமானங்கள் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேபாள மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியதாக பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிவாரணப் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோர் தலைமையில் விசேட குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுடன், இலங்கை மக்கள் இணைந்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.