19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்களிப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்றை நாளை திங்கட்கிழமை 27 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அருகில் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் உட்பட ஏனைய கட்சியினர் சிவில் அமைப்புக்களையும் இணைந்து கொள்ளும்படி அக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்ட ஐ.தே.க. செயற்பாட்டாளர்களைப் பணித்துள்ளார்.