குழப்பம் விளைவிக்கும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

 கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் இறுதி தினமான நாளை 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பரீட்சை மத்திய நிலையங்களுக்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக பரீட்சை சட்டத்துக்கு அமைய சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
department-of-examinations-sri-lanka-415x260

பரீட்சை மண்டபங்களுக்கு வெளியே குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வெளியே குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என். ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.

பரீட்சை மத்திய நிலையங்களுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்பவர்கள் தொடர்பிலான சகல விவரங்களையும் பரீட்சைகள் திணைக்களத்து கையளிக்குமாறு பரீட்சை மத்திய நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய நிலையங்களுக்குள் குழப்பங்களை விளைவிப்போரின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவது கைவிடப்படும் வரையிலும் தண்டனை கிடைக்கும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையின் இறுதிநாளன்று தொடர்ச்சியாக இடம்பெறும் குழப்பங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே இவ்வாறான தீர்மானங்களை எடுத்ததாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.